மகிழ்ச்சி-கவிதை

சிறு தூறல்களாய் மழை!
சொட்டு..சொட்டாய்
குடைகம்பி களின் ஊடே
நீர்த்திவலைகளாய்!
தெறிக்கையில்…உள்ளுக்குள்
மகிழ்ச்சி!
கடற்கரை மணற்பரப்பில்
கால்சுடும் கொதிப்பினில்
காதலியின் அருகாமையும்
கொஞ்சல்களுமே….
மகிழ்ச்சி
அம்மா அக்கறையாயும்
அன்பாயும் கொடுத்து விட்ட
குடைதனை பிரிக்காமலே
நனைந்து திரும்பும்
மழையில் நனையும்
சின்னஞ்சிறார்களுக்கு
மழை நீரே மகிழ்ச்சி
வானமே குடையாக
காத்திருக்க ………
வகைவகையாய் வண்ணவண்ண
புகைவளையங்களை வளையவிட்ட
மானிடருக்கெல்லாம்…..
வாரிவழங்கிய வள்ளலான
வானமே
மகிழ்ச்சி
---கே. அசோகன்