தேனாமிர்தம்

கண்டாங்கி சேலை ஒன்னு கட்டிக்கிட்டு
கஞ்சி கலயம் சுமந்துகிட்டு
வஞ்சி உன்ன இன்னும் காணமே...
களத்து மேட்டில் நான் காத்திருக்கேனே......


நேத்து வச்ச மீன் கொழம்பும்
சேத்து வச்ச பழையச் சோறும்
கடிச்சு திண்ணப் பச்சை மொளகாய்
நெனைச்சுப் பார்த்தாலே எச்சூருதே......


காலை வெயிலு உடல வாட்டுது
வேல செஞ்சு களப்பும் கூடுது
வெரசா நடப்போட்டு நீயும் வந்திடு...
என் வேர்வையை நீயும் துடைத்திடு......


நெல்லுக்கு பாயுற வாய்க்கா தண்ணி
புல்லுக்கு உடச்சிட்டுப் பாயுதே...
மடையை அடைக்கத் தான் தேடுறேன்
மம்பட்டி கையில் சிக்கலையே......


மண்ண வெட்டி மடையை அடைச்சாச்சு
பாதப் பாத்தக் கண்ணும் பூத்தாச்சு
தொலவுல ஒரு குரலுக் கேட்குதே...
என்னவதான் அங்கு வாராளே......


கொஞ்சம் செத்துப் போன நாவுக்கு
ருசியால் உசுரூட்டப் போறேன்...
தேவலோகம் கிடைக்காத தேவாமிர்தம்
என் தேவதை கைதரும் தேனாமிர்தமே......

எழுதியவர் : இதயம் விஜய் (16-Jul-16, 7:34 pm)
பார்வை : 97

மேலே