தெளிவு

என்ன செய்தேன்
என்னவர்க்கு
என்னளவில்
ஒதுங்கி நின்றேன்
ஓரமாய்.


குக்கூ........
வசந்தத்தின் அழைப்பு
வந்த திசையில்
விழி நிமிர்த்தி பார்த்தேன்
கிளை மறைவில்
கோகிலங்கள்.


ஓரினமாய்ச் சேர்ந்திருக்க
சொந்தமாய் வீடில்லாத
குயில்களின் குதூகலிப்பில்
தெளிவு பெற்றேன்
சிறகு விரித்து பாடிடுவேன்
நம்பிக்கையுடன்.

@

எழுதியவர் : கனகசபாபதி செல்வநேசன் (16-Jul-16, 11:52 pm)
Tanglish : thelivu
பார்வை : 130

மேலே