தமிழ் அன்னை

அன்னையே தமிழ் அன்னையே
வணங்குகிறேன் உன்னையே
அழகான அன்னை நீ
ஆரவாரமில்லாதவள் நீ
இனிமையானவள் நீ
எளிமையானவள் நீ
காடு மலை எல்லாம்கடந்து
எங்கோ ஒரு வனத்தில்
அமர்ந்திருக்கிறாயே
ஏன் தாயே ஏன்
புத்தி கெட்ட மனிதர்கள் மேல் கோபம் கொண்டு
அவர் தம் செயல் வெறுத்து மனம் வெதும்பி
பச்சை நிற மரங்கள் சாமரம் வீச
மஞ்சள் நிற ஆடை உடுத்தி
மங்கள சின்னம் அணிந்து
சுகமான தென்றல் போல்
முகத்தில் முறுவல் காட்டி
யாதும் ஊரே யாவரும் கேளீர்
என்று சொல்லாமல் சொல்கிறாயோ
அன்னையே என் அழகு அன்னையே
பணிகிறேன் உன் பாதங்களை

எழுதியவர் : (17-Jul-16, 11:36 am)
Tanglish : thamizh annai
பார்வை : 179

மேலே