என் மகள்

நான் பெற்ற மகளே....

நான் பெற்ற மகளே...

நிலவின் ஒளித்துளியாய்

உயிர் கொண்டு வந்தவளே

என் தாயின் முகவடிவில்

தவழ்ந்து வந்தவளே

இத்தரணிக்கே அரசனென்று

உன் பூஞ்சிரிப்பால் அறிந்தேனே

ஆயிரம் மனச்சுமைகள்

நீங்காது நின்றாலும்

உந்தன் முத்தத்தில்

அனைத்தையும் மறந்தேனே

வானுலகில் தேவர் என்பார்

வையகத்தில் இல்லையென்பார்

என் வீட்டில் நான் கண்டேன்

உன்னைத்தான் தேவதையாய்

என் மகளே ! என் மகளே !

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (17-Jul-16, 11:38 am)
Tanglish : en magal
பார்வை : 188

மேலே