கர்ம வீரர் காமராஜரின் கல்வி கொடை
விருதுநகர் வார்த்தெடுத்த தென்னகத்தின் காந்திஜி
உடும்புநிகர் உறுதிபடைத்த திராவிடத்தின் நேதாஜி
நேருக்குநேர் நிலமைகளறிந்த தமிழகத்தின் நேருஜி
மூன்று - ஜி-களும் கலந்த கலவையே கர்மவீரர் காமராஜி
பார் போற்றும் கல்வியை பாமரனுக்கு வழங்கிய படிக்காத பாரதி
பாமர ஜாதிமேல் பாசாங்கு காட்டாது பாசம் காட்டிய பார்த்தசாரதி
பாமர சிறுவன் சொல்கேட்டு பகலுணவு திட்டம் படைத்த பரமஜோதி
பள்ளிச்சீருடை திட்டத்தால் ஏற்றத்தாழ்வுகள் கலைந்த சமதர்மவாதி
குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்த மூதறிஞர் ராஜாஜியை
கலகம் விளைக்கும் திட்டமென எதிர்த்தாரே நாவறிஞர் காமராஜ்
பள்ளிக்கல்வி இயக்குனர் சுந்தரவடிவேலரை காரில் ஏற்றிக் கொண்டு
கடைகோடி கிராமங்களிலும் பள்ளிகள் திறந்தாரே கல்விக்கண் நாயகர்
ஓராசிரியர் நியமனத்தால் ஓராயிரமிடங்களை நிரப்பிய சாதூர்யவான்
முதியோர் கல்விகற்க இரா பாடசாலைகளை திறந்த சாமார்த்தியவான்
பச்சைத் தமிழனென ஈரோட்டு தந்தையால் பாரட்டப்பட்ட சத்தியவான்
நிர்வாகத் திறமையால் கிங்மேக்கர் என பெயர்பெற்ற பாமர சக்திமான்
பதவி பறிபோனப் பின்னாலும் பதறாமல் பணியாற்றியதால் பெற்றார் ‘பாரத ரத்னா’
உதவிகேட்டு யாரேனும் உறவுகள் வந்தால் சர்க்கார் சொத்து சல்லி -பெறாதென்பார்
இறுதிவரை எளிமையாய் வாழ்ந்த பெருந்தலைவர் இப்பாரினில் யாரெனில்..?
பள்ளிச்செல்லும் குழந்தையும் பாதிவழியில் நின்று
உரக்கச்சொல்லும் காமாட்சி என்கிற காமராஜ் என்று…!
********************************************************************************************************************************************************
( வேறு )
காமராஜர் ஊரூ விருது நகர் – அவர்
கர்ம வீரர் ஆனது தலைநகர்
குமாரசாமி நாடாருக்கு பிறந்தவர் – அவர்
சிவகாமி தாயாருக்கு பயந்தவர்
பள்ளி கல்வி திட்டத்தில் சிறந்தவர் – அவர்
குல கல்விமுறையை ஒழித்தவர்
பகலுணவு அமிர்தத்தை தந்தவர் - அவர்
பசியாறும் குழந்தையை மகிழ்ந்தவர்
செல்வச் சீமான்களின் குழந்தைகளை
சிலுக்கு உடைகளில் பார்த்தவர்
சீருடை திட்டத்தை கொண்டுவந்து
ஏற்றத் தாழ்வுகளை உடைத்தவர்
பட்டிக்காடெங்கும் பட்டணம்போல்
பள்ளிக்கூடங்கள் அமைத்தாரு
கைநாட்டுகள் இல்லாதபடிக்கு
இரவு பாடசாலைகள் அமைத்தாரு
பெரும்தலைவர் - கர்ம வீரர் – கிங்மேக்கர்
அவரை பின்தொடரதவர் வெறும் ஜோக்கர்
படிக்காத மேதை பாரத ரத்னா ஆன கதை
பாட்டாளிகளை படித்தவர்களாய் ஆக்கியதற்கு கிடைத்த மரியாதை
கல்விக்கண் திறந்தவரென்று காலம் போற்றுது
காமராசரின் வெற்றிடத்தை இங்காரு நிரப்பியது
ஈயடிச்சான் காப்பியாக எதை செய்தாலும் – அதில்
எத்தனை கோடி லாபமென்று கணக்குப் பாக்குது..
**********************************************************************************************************************************************************
சாய்மாறன்
16/7/16