இன்னொரு நாள்

ஏதோ ஒரு
இலட்சியம்
தேடிப்
பயணித்தன
இரு கைகள்.
இலக்கிய
வீட்டின்
சாளரங்களூடு
எழுத்தால்
உரையாடின..
சுய நலம்
அற்ற பிணைப்பில்
சுற்றிக் கொண்டன.
மொழி தாண்டிய
உணர்வுகள்
மௌனமாய்
பேசிக்
கொண்டன..
தம் நிலை உணர்ந்த
பொழுதுகளில்
தனித்தனியே
விலகிச் சென்றன.
எந்த வெளி வேசங்களும்
சுய நலமும் இல்லாத
அந்த எழுத்துக்களை
கோர்த்துக் கொள்ள முடியாத
இலக்கியம்
ஒதுங்கிக் கொண்டது..
இன்னொரு நாளில்
அந்த எழுத்துக்களும்
பேசப்படலாம்..
அப்போது அவை
வரவேற்கப்படலாம்
அதே இலக்கியத்தால்.

எழுதியவர் : சிவநாதன் (17-Jul-16, 11:50 pm)
Tanglish : innoru naal
பார்வை : 79

மேலே