என் பிறந்தநாள்

என் ஆயுளில்
ஒன்று
அழிந்த நாள்....
ஆம் இன்றே
என்
பிறந்தநாள்.....!!

பெற்றவள்
வாழ்த்துக்கூற
உள்ளம் உவகை
கொண்டேன்.....
தந்தையின்
நினைவில்
மூழ்கி....ஒருசில
கணங்கள்
மூலையில்
முடங்கினேன்.....!!

முகம் காணாத
தந்தையின்.....
கவலையை
போக்கிய.....
ஒரேயொரு
நிழற்படம்.....
எங்கள்
எல்லோருக்கும்
அது
ஒன்றே
சாமிப்படம்.....!!

சாமியைத் தேடிப்
போகவில்லை.....
நண்பனுக்கு
சாராயம்
வாங்கி கொடுக்கல.....
பார்ட்டி என்ற
பேச்சுக்கே
இடமில்லை.....
பாடசாலை
நண்பனின் மறவாத
வாழ்த்தும்.....நிகழ்கால
முகப்புத்தக
ஒருசில வாழ்த்துக்களும்
ஒன்று
சேர்ந்து
இன்றய நாள்
இனிதே மறைந்து
போனது......!!

(கவலை +தீ)

எழுதியவர் : thampu (18-Jul-16, 2:54 am)
Tanglish : en piranthanaal
பார்வை : 951

மேலே