மழையின் நடனம்

அந்த ஜன்னலுக்கு வெளியே
மழையின் நடனம்!
பூமிக்கு பச்சை வர்ணம்
தீட்டப்போகும் கர்வம்
அந்த மழைத்துளிகளில் தெரிகிறது!
அந்த மழைத்துளிகளை
ஆட்டுவிக்கும் பெருங்காற்று
அவற்றை வேறொரு
இடத்திற்கு கடத்திச்செல்லும்
முனைப்பை காட்டுகிறது!
பெருந்தாண்டவம் ஆடுகின்றன
பருத்த மரங்களெல்லாம்!
காற்று தனது
பலகீன உறுப்புகளை பறித்தாலும்
நிற்கப் போவதில்லை
மரங்களின் தாண்டவம்!
வெளிச்ச கீற்றுகள்
பலத்த முரசொலி
எல்லாமும் சேர்ந்து விட்டன!
உச்சகட்டமாய்
காற்றிடமிருந்து விடுபட்டு
அழுது தீர்க்கிறது மழை!
ஆடிய களைப்பில்
அங்கங்களை கழுவிக் கொண்டிருக்கின்றன
மரங்கள்!

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (18-Jul-16, 6:37 pm)
Tanglish : mazhaiyin nadanam
பார்வை : 175

மேலே