தாயின் பராமரிப்பு

தாயின் பராமரிப்பு

தினமும் உனது
கரங்களால் அழுக்ககற்றும்
ஆனந்தக் குளியல்!

அந்த ஆனந்தத்தை
அள்ளிப்பருக என் மேனியில்
துவண்டு தழுவும்
துண்டின் துவட்டல்!

அம்மண தேரோடும்
மேனியில், நீ செய்த
ஆடை அலங்காரம்!

சிக்கடித்த எண்ணையும்...
நெய் மணக்கும், நீ!
செய்யும் சிகையலங்காரம்!

சீமையிலே! பெயர் சொல்லும்...
நீ! எனது நெற்றியிலிடும்,
சிங்காரப்பொட்டு!

உன் கையால் உண்ட...
அமுதத்தை வார்த்தெடுத்த
ரசச்சோறும்!

அவற்றை உண்டு ருசிகண்ட...
வயிற்று அமிலம் அறப்போராட்டம்,
நடத்துகின்றன!
அமுதத்திற்காக!

உனது விரல்களின்...
விஞ்ஞானத்தில் எனது...
பராமரிப்பு!

கானலின் நிழலில் தங்கிய...
தார்ச்சாலையும், மோர் சுரக்கும்!
நீ! என்னை பள்ளிக்கு
அழைத்துச் செல்லும்...
தடாகத்திலே!

பள்ளியில் உடலை தனித்துவிட்டு,
உயிரை உனதுகையோடு
அழைத்துச்சென்றாய்!

ஆதலால்! அன்னையே!
உனை கற்பித்த எனக்கு!
உரைநடை கற்பிக்க முடியவில்லை!

எழுதியவர் : Maniaraa (19-Jul-16, 9:11 pm)
பார்வை : 214

மேலே