தடம் மாறும் மனிதம்
தன்னிலை மறந்து
தடம் மாறும் மனிதம்..
எங்கு செல்கிறது...
தனி மனிதன் நடக்க..
சுதந்திரம் இல்லை
போகும் போக்கில் வழிப்பறி
கொள்ளை,கொலை என
நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது..
சாலையில் கிடப்போருக்கு
உதவ ஒருவரும் இல்லை
சந்நிதானத்தில் இருப்போருக்கு
உண்டியல் இல்லை...அதையும்
உடைத்துவிடுகிறது இந்த மனிதம்..
தினத்தந்தியை திறந்தோமென்றால்
தினம் ஒரு செய்தி நெஞ்ஞை பிழிகிறது..
தன் சுயத்திற்காக இந்த மனிதம்..தடம் மாறி
மனிதத்தையே இழக்கிறது...