கடைசி முத்தம்

மனைவி : மாமா இங்க வாங்க.

கணவன் : என்னடி ?

மனைவி : மூச்சு விட சிரமமா இருக்கு மாமா

கணவன் : விட்றாதடி

மனைவி : விட முடியலனு கஷ்டபடுறன்.நீங்க விட்றாதனு சொல்றீங்க.

கணவன் : நான் அந்த அர்த்தத்துல சொல்லலடி.
"ஒரே அடியா மூச்சு விட்றாதடி.
என்ன தனியா தவிக்கவிட்டு போய்டாதடி" என்ற அர்த்தத்துல சொன்னன்.

மனைவி :
நீங்க என்ன நெனைப்பீங்கனு எனக்கு தெரியாதா மாமா.
சும்மா கேட்டன்.
வலி தாங்க முடியல மாமா.
என் மேல படுத்துக்கோங்க மாமா

கணவன் :
உன் மேல படுத்தன்ன .எப்படிடி மூச்சு விடுவ.

மனைவி
அதுக்காக தான் படுக்க சொல்றன்.

கணவன் :
என்ன

மனைவி :
ஒன்னும் இல்ல.
நான் உங்கள கடைசியா ஒரு தடவ கட்டி பிடிக்கணும்னு நெனைக்கறன்

கணவன் :
வாயை பொத்தி.கட்டிபிடித்து
உன் உடம்புக்கு ஒன்னும் ஆகாதுடி
நீ நூறு வருஷம் நல்லார்ப்படி
எனக்கு நெறையா அன்பு தொல்ல குடுப்ப.
குடுக்கணும்.

மனைவி :
அடுத்த கணமே
கடைசி முத்தமிட்டு கண் மூடினாள்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Jul-16, 8:40 am)
Tanglish : kadasi mutham
பார்வை : 240

மேலே