தவறு

அன்புக்கு வேலியில்லை
அதுக்கு நல்லவர்கள் கெட்டவர்கள்
என்று வேறுபாடு தெரியாது
ஆனால் ....
நான் உன் மீது கொண்ட அன்பு தான்
தவறாகி போனது இன்று
நீ இன்னொருத்தின் சொந்தம்
என்று தெரிந்தும் உன் மேல் அதிகம்
அன்பு வைத்தது தவறு....
அன்பு காதலாக மாறியது தவறு ....
தினமும் உன் குரல் கேட்க ஏங்கியது தவறு ...
தினம் தினம் உன்னை காண வேண்டும்
என்று நினைத்து தவறு....
உன்னிடம் அதிகம் உரிமை கொள்ள நினைத்து
தவறு....
என் தவறுகள் அனைத்தும் இன்று உனக்கு
பிரச்சனையாக மாறி விட்டது
நானே உன்னை விட்டு விலகி செல்கிறேன்
உன்னை மறந்து வாழ அல்ல...
நீ சந்தோசமாக வாழ..
உன் மீது கொண்ட அன்பு என்றும்
மாறாது. ..

எழுதியவர் : சத்தியா (21-Jul-16, 8:37 am)
Tanglish : thavaru
பார்வை : 146

மேலே