பேசாத வார்த்தைகள்

பேசாத வார்த்தைகள்
பெரும் சன்மானம்
கோடான கோடி அமைதி

பேசாத வார்த்தைகள்
வழங்கும் பரிசு
உண்மை உறைவு

பேசாத வார்த்தைகள்
ஈட்டிடும் நன்மை
புண்ணியத்தில் ஓர் பங்கு

பேசாத வார்த்தைகள்
பெற்றுத் தரும் நன்மதிப்பு

பேசாத வார்த்தைகள்
பயிற்றுவிக்கும் பாதைகள்

பேசாத வார்த்தைகள்
வழித்தடம் சொர்க்கம்

பேசாத வார்த்தைகள்
வாழ்க்கையின் தத்துவங்கள்

பேசாத வார்த்தைகள்
பெருக்கிடும் மகிழ்ச்சி

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (21-Jul-16, 6:44 pm)
Tanglish : pesaatha varthaigal
பார்வை : 182

மேலே