10 செகண்ட் கதைகள் - உழைப்பு
அது ஓர் ஆப்பிரிக்கக் காடு..
ஒவ்வொரு நாள் காலையிலும்,
ஒரு சிங்கம் அங்கு விழித்து எழுகிறது...
அதற்குத் தெரியும்
இந்தக் காட்டிலேயே வேகமாக ஓடக்கூடிய மானைவிட வேகமாக ஓட வேண்டும். இல்லையெனில், மவனே #பட்டினிதான்...
அதே காட்டில் இன்னொரு மானும் விழிக்கிறது. அதிவேகமாக ஓடக்கூடிய சிங்கத்தைவிட வேகமாக ஓடாவிட்டால், மவனே #சாவுதான்...
நீங்கள் மானாக இருக்கிறீர்களா...?
சிங்கமாக இருக்கப்போகிறீர்களா?
அது கேள்வி அல்ல..!
காலையில் எழுந்ததும் ஓடத் தொடங்க வேண்டும்..
அதுதான் முக்கியம்..!!
( ஓட்டம்....எனும் சொல்.....
உழைப்பு....என நமக்கு....அர்த்தப்படுகிறது )