இனிக்கும் கற்பனைகள்

இனிக்கும் கற்பனைகள்

கற்பனை உலகில்
ஆசைகள் அனைத்தும்
நிறைவேற்றப்படும்
அதில்
நிஜத்தின் வலிகள் இல்லை

கற்பனையில் வருபவர்கள்
களங்கமற்றவர்களாகவே இருப்பார்கள்

கலயாணத்தைவிட காதல் இனிக்கிறது
கல்யாணம் நிஜத்துடன் தொடர்புடையது
காதல் கற்பனையுடன் தொடர்புடையது

கற்பனையில் அடுத்தவர்களும்
நானாகி போகின்றார்கள்

கற்பனையில் ஊடல் கூடல்
அனைத்தும் இன்பமே
காரணம் அவற்றை
ஆரம்பிப்பதும் நானே
முடிப்பதும் நானே

கற்பனைக்கு கட்டுப்பாடுகள் இல்லை
ஆனால்
கற்பனையில் அனைவரும் அனைத்தும்
என் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்

அது என் உலகம்
எனக்கான உலகம்
அதில்
நானே அரசன்
நானே அரசி
நானே எஜமானன்
நானே அடிமை
ஹா...ஹா...ஹா...

அடுத்தவர் கற்பனையில்
நான் வருவது ஆனந்தம்

அந்த அடுத்தவர்
எனக்க பிடித்தவரானால்
அது பேரானந்தம்

எழுதியவர் : சூரியகாந்தி (22-Jul-16, 11:11 am)
Tanglish : inikkum karpanaigal
பார்வை : 120

மேலே