என்னவென்று நான் சொல்ல

என்னவென்று நான் சொல்ல.........

என் கனவுகளில் உன் முகம்
என் மனச் சுவரில் உன் ஓவியம்
என் விழிகளுக்குள் உன் ஒற்றை கண் சிமிட்டல்கள்
என் உதட்டில் நீ வரைந்த சித்திரங்கள்.......

என் விழியில் உன் விழியால் எழுதிய கவிதைகள்
உன் மாயப் புன்னகையில் என் மனச் சிதறல்கள்
என் தவிப்பில் உன் இதயத் துடிப்புக்கள்
என் விடியா பொழுதுகளில் நான் தொலைத்த என் இரவுகள்...

உன் சீண்டலில் நான் கொண்ட வெட்கங்கள்
உன் தீண்டலில் எனை தாக்கிய மின்னல் கீற்றுக்கள்
காற்றில் அனுப்பிய தூதை
காற்று என் காதில் முத்தமிட்டு சொன்ன சேதியை
உன் விழி நோக்கி என்னவென்று சொல்வேனடா........???

எழுதியவர் : அன்புடன் சகி (22-Jul-16, 1:08 pm)
பார்வை : 266

மேலே