பட்டறிவுப் புலம்பல்
நதி பிறக்கும் இடமோ ஒன்று
அது சேரும் இடமோ ஒன்று
இடை நிறுத்த இங்கு வழியில்லையே
இதை அறியாதார் யாரும் இங்கில்லையே
தானனன்னே தானனன்னே தனனானன்னே................
தானனன்னே தானனன்னே தனனானன்னே................
உள்ளம் ஆசையென்னும் கதவையே திறந்துவைக்குது
உலகம் அதில்விழுந்தே நாளும்தன் உயிர்முடிக்குது
இருக்கும்போது வருவதை என்றும் நினைப்பதுமில்லை
வேதனை வந்தபின்னே அழுதுபுலம்பி நன்மையுமில்லை
தானனன்னே தானனன்னே தனனானன்னே................
தானனன்னே தானனன்னே தனனானன்னே................
பிறர் களவாடச்சேர்த்து வாழும் வாழ்வுதானென்ன
நாளும் களவாடியே வாழும் வாழ்வுதானென்ன
இருக்கும்போது கொடுத்து உதவ மனமில்லையே
சாவுங் காலத்திலே ஞானம்வந்தும் பலனில்லையே
தானனன்னே தானனன்னே தனனானன்னே................
தானனன்னே தானனன்னே தனனானன்னே................
சொத்துப் பத்துச் சொந்தத்தோடு வாழ்ந்திருந்தாலும்
நீ நாதியத்துத் தெருவெல்லாம் திருஞ்சிருந்தாலும்
வாழும்போது என்ன பேரில் இருந்தாழுமே
உயிர் மாண்டழிஞ்சு போகும்போது பிணமாகுமே
தானனன்னே தானனன்னே தனனானன்னே................
தானனன்னே தானனன்னே தனனானன்னே................
இருக்கும் வரை சாவையிங்கு அழைத்திருப்பாரும்
சாவைக் கண்டபின்னே தாங்காது அடித்தழுவாரே
இயற்கை என்றும் சமநிலையில் தவறுவதில்லை
காலம் முடிந்துவிட்டால் ஒருவரையும் விடுவதுமில்லை
தானனன்னே தானனன்னே தனனானன்னே................
தானனன்னே தானனன்னே தனனானன்னே................
- செ.கிரி பாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்