தினம் ஒரு பாட்டு- இயற்கை - 24 = 170
"நவம்பருல செத்துப்போன
நரகாசூரா ! நரகாசூரா ! !
நாங்க உன்பேராலே
தீபாவளி கொண்டாடுறோம்
ரொம்ப ஜோரா ! ரொம்ப ஜோரா ! !"
காலையிலே எந்திரிச்சி எண்ணைத் தேய்ச்சி
கொதிக்கவச்ச வெந்நீர தலையில ஊத்தி
புதுசா தச்சுவச்ச துணிமணிய மாட்டிக்கிட்டு
சிவகாசி பட்டாச கொளுத்தி வைப்போம் !
ஆக்கி வெச்ச பண்டத்தை அடுக்கி வெச்சி
ஆண்டவனுக்கு அருகாமை படை சாத்தி
அடுத்த வருசம் இன்னும் நல்லா செஞ்சி படைக்க
அருள வேண்டுமென ஆண்டவன வேண்டிக் கொள்வோம் !
வீட்டுக்கு வீடு வெடி வெடிக்கும் - பல்லு
வெள்ளாட்டு எலும்புகள கடி கடிக்கும்
முறுக்குக்கும் சீடைக்கும் சண்டை நடக்கும்
மூக்குப்புடிக்க தின்னுப்புட்டா வயித்த கலக்கும்
ஏழைக்கேத்த எள்ளுரண்டை
அவன் வீட்டில் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை
எஜமானுகேத்த பொன்னுருண்டை
அவன் கொளுத்தும் வெடிக்கு அளவேயில்லை
புதுமண தம்பதிக்கு இது தலை தீபாவளி
பொண்ண பெத்த அப்பன்களுக்கு தலைவலி
அஞ்சுமூணூ அடுக்கடுக்கா செஞ்சாலும்
அழுமூஞ்சி சம்மந்திக்கு நெஞ்சுல வலி
நாடெல்லாம் வேட்டு சத்தம் முழங்குது
நட்பெல்லாம் நலம் சொல்லி வலம் வருது
நரகாசூரா உனக்கு கோடி நமஸ்க்காரம்
நாங்க மனம் பொங்க நீதானே ஆதாரம் !