நன்றி அப்பா நன்றி
என்ன பயம் இனி
எனக்கு உன் விரல்
பிடித்து நான் நடக்கும்போது
அப்பா!
உனை உதைத்த பிறகும்
என் கால்களுக்கு முத்தமிட்டு
உதைக்கிறாயா எனை மேலும்
உதை என பெருமை
கொண்டாயே அப்பா!
நான் நடந்தால் என்
கால் வலிக்கிறதோ இல்லையோ
உன் இதயம் வலிப்பதை
நான் அறியேன் அப்பா!
என் முதுகில் புத்தக
சுமையை சுமப்பதற்காக
உன் முதுகில் கூலி
மூட்டையை சுமந்தாயே அப்பா!
என் அருமை மகனே
ஓடி வா என்னிடம்
இப்படித்தான் நீயும் உயர
போகிறாய் என்று எனை
உன் தோளில் அமர்த்தி
சொன்னாய் அன்றே அப்பா!
வேதனை தரும் கண்ணீர்
அது ஆனந்த கண்ணீராய்
மாறிடுமே உன் தோளில்
நான் சாய்ந்து அழும்
போது அப்பா!
இறுதி மூச்சு வரை
உழைத்தாய் இயந்திரமாய்
உன் உடம்பு தேய்ந்திட
எனக்காக அப்பா!
தந்தையே எல்லாம்
தந்தை யே எனக்காக
அதனால் தான் ஆழைக்கிறோமோ
தந்தையே என உனை!