பொன்மொழித் துளிகள்

நாணலின் வளைவு அவசியம் - நாம்
உடைந்து போகாதவரை !

அறிவுரை கூறுவது அவசியம் -பிறர்
விரும்பி கேட்கும் வரை !

நம்பிக்கை இருப்பது அவசியம் -நமக்கு
கொடுத்த காலம் முடியும் வரை !

தேடல் மிகவும் அவசியம் - நம்
தேவைகள் நிறைவேறும் வரை !

உறக்கம் தினமும் அவசியம் - நம்
சோர்வுகள் களையும் வரை !

அர்த்தங்கள் மிகவும் அவசியம் - நம்
வாழ்வு முடியும் வரை !!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (23-Jul-16, 7:38 pm)
பார்வை : 245

மேலே