பட்டதாரிகள் பெரும்பாலோரின் நிலை
பட்டதாரிகள் பெரும்பாலோரின் நிலை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நான் The New Indian Express ஆங்கில நாளேட்டின் ஆசிரியருக்கு மின்னல் அஞ்சல் வழியாக அனுப்பிய கடிதம். நான் அவசரத்தில்
கடித்ததிற்கு “Literate Graduates” என்ற தலைப்பைக் கொடுத்து அனுப்பிவிட்டேன். ஆனால் அந்நாளிதழின் ஆசிரியர்
அதை Illiterate Graduates என்று சரியாக திருத்தம் செய்துவிட்டார். Literate எனபதற்கு பதிலாக ignorant, uneducated, unenlightened, unlettered
என்ற சொற்களில் ஏதாவது ஒன்றை நான் பயன்படுத்தியிருக்கவேண்டும். இப்போது புற்றீசல்கள் முளைத்துள்ள தொழிற்கல்வி
நிலையங்களால் பாதிக்கப்படுவது கலை & அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்ல. தொழிற் கல்வியும் தான். அதைச் சுட்டிக்காட்டவே
இந்த பதிவு. 100/100 பெறுவது ஒரு காலத்தில் கணிதப் பாடத்தில் மட்டுமே சாத்தியமானது. மனப்பாடக் கல்வியினாலும், பெற்றோர்
பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கும் போட்டி மனப்பான்மை, தேர்வுத்தாள் திருத்துதல், மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்குதல்
ஆகியவற்றில் ஏற்பட்ட தாரளமயமாக்கல் கொள்கையால் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் மேகத்தைத் தொடும் அளவுக்கு
வளர்ந்து செல்கிறது. கல்வித் தரம் உயர்கிறதா கீழ்நோக்கி விழுகிறதா என்பதை கல்வியாளர்கள் தான் சொல்லவேண்டும். (கடிதம்
வெளியான நாள்: வெள்ளி, - மார்ச், 2001)