பிஞ்சும் நஞ்சாய்
உடலில் ஓடும் செங்குருதி
தமிழ்! தமிழ் என கத்திக்கொண்டு
மூளைக்கு சொன்ன செய்தியாதோ?
நம் மக்கள் நாடி நரம்பும் சத்துக்கொள்ள!
கிழிந்த இதயம் ஒட்டிகொள்ள!
நீ வீசிய மழைத்துளி சென்றிடுமா?
பச்சை பயிராய் விளைந்திடுமா?
வாயில்லா நம் மண்ணும்
இங்கு அழுகையிலே
நச்சு புதையலை புதைத்தவன் யார்?
உயிரை கிள்ளு கீரையென விற்பவன் யார்?
பிஞ்சும் நஞ்சாய் காய்த்துவிட்டல் - எங்கள்
தலைமுறை நிலை என்ன?
மண்ணே உன் அழுகை சொல்லிவிடு
உரக்க உன் உரமென்ன கதறிவிடு
மனிதன் உயிர்மூச்சை பிச்சைகொடு
இயற்கை விவசாயம் பெற்று விடு.....