கவிதை சொல்

கூர் ஊசி முள்ளோ
உன் கூர்மையான பார்வை!

என்னைக் கண்டால்
திட்டித் தீர்ப்பாள்
தேன் சிந்தும் பாவை!

கவிதை எழுதச் சொல்லுதே
இளம் வஞ்சியின் வனப்பு...
தினம் (கெஞ்சி) கொஞ்சி மகிழச் சொல்லுதே
அவளின் இளமைச் செழிப்பு!

அவள் சிந்தும் ஒவ்வொரு சொல்லும்
அடிக்கரும்புச் சாரை மிஞ்சும்...
அவள் மெளனம் கேட்கும் மஞ்சம்!

எதிர்மறைமறை ஆசையாலே
காணும் சுகம் அதிகம்தான்...
தினம் வண்டுண்டு மகிழும்
பூஞ்சோலையிலே...
பூத்த பூவை நீதானே
இதழ் செந்தேனே...
உண்டு கிறங்க வந்த
இளவண்டு நான் தானே!

எழுதியவர் : கிச்சாபாரதி (25-Jul-16, 11:07 pm)
Tanglish : kavithai soll
பார்வை : 111

மேலே