என்னைப் பற்றி நானே
உள்ளங்கையில்
உருவமாகநான்
உள்ளத்திலும்
உண்மைநான்
உள்ளன்பிலும்
உருகிடும்நான்
உயர்பண்பிலும்
உச்சம்நான்
உள்ளதைமட்டும்
உரைப்பவன்நான்
உள்நோக்கமிலா
உள்ளம்நான்
உதவியெனில்
உடன்பிறப்புநான் !!!@@!!
( என்னை பற்றி நானே கற்பனையாக சொல்லிக்கொள்வதாக எழுதியது.
யாரும் கோபப்படாமல் இருக்க வேண்டுகிறேன் )
உங்கள்
பழனி குமார்