மகிழ்ச்சி
மகிழ்ச்சி
அவனை பிடிக்கவில்லையா
அவன்மீது வெறுப்பா
அவன்மீது பொறாமையா
அவனுக்கு எதிராகப் பேசவேண்டுமா
அவன்
சரியாகப் பேசியிருந்தாலும்
சாதரணமாகப் பேசியிருந்தாலும்
நேர்மையாகப் பேசியிருந்தாலும்
நேர்மறையாகப் பேசியிருந்தாலும்
அவனது
சாதியைப் பார்
மதத்தைப் பார்
மொழியைப் பார்
இனத்தைப் பார்
அதற்கு
வேறு அர்த்தம் கற்பித்து
அவனை அவமானப்படுத்து
அதில்
குற்றம் கண்டுபிடித்து
அவனை குற்றவாளியாக்கு - மகிழ்ச்சி