தமிழா தமிழா சொல்
தமிழா தமிழா சொல் தினமும் நீ
தரணியில் பேசுவது தமிழா சொல்
உலகின் முதல் மொழி தமிழ் உணர்
உலக மொழிகளின் தாய் தமிழ்
ஊடகத்தில் நாளும் நடக்குது தமிழ்க்கொலை
உலகமே பார்த்துச் சிரிக்குது தமிழின் நிலை
நாளிதழ் வானொலி தொலைக்காட்சி அனைத்திலும்
நாளும் சிதைக்கின்றனர் நல்ல தமிழை
அழகு தமிழில் அம்மா இருக்கையில்
ஆங்கிலத்தில் மம்மி என்றழைக்கும் மடமை
அற்புதத் தமிழில் அப்பா இருக்கையில்
ஆங்கிலத்தில் டாடி என்றழைக்கும் கொடுமை
தமிழோடு பிற மொழி கலந்துப் பேசுவது பிழை
தமிழை தமிழாகப் பேசிட நீ பழகு
ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் கலந்து
ஆங்கிலேயன் என்றும் பேசுவதில்லை
தமிழன்தான் தமிழ் பேசும்போது
தமிங்கிலம் பேசி உளறுகின்றான்
இரு கரம் குவித்து வணக்கம் சொல்
ஒரு கரம் தூக்கி குட்மோர்னிங் நிறுத்து