சுடுகின்ற உண்மை

சிங்கள சந்தையில் மலிவாய் கிடைப்பதென் ஈழ தமிழனின் உயிரோ......
அடங்கி ஒடுங்கி உடைந்து விட்டோம் இன்னும் அடியாமை உடையவில்லையோ ....
பிழைப்பிற்காய் கடலுக்குள் சென்று பிணமாகி திரும்புவதோ.....
இனவெறியில் இறப்பதர்க்கா இறைவன் இதயங்களை படைத்தான்.....
திரை கடல் ஓடியும் திரவியம் தேட சென்றான் அந்த திரவிய கடலில் குருதியாய் கலப்பதோ.....
பல நூறு மைல்களுக்கு அப்பால் பூகம்பம் என்று தவித்து பக்கத்துக்கு வீட்டில் தீ பிடிப்பதை பார்க்க மறப்பதோ......
புதுமை படைக்கும் பரத தாயின் புதல்வர்களே கொஞ்சம் புரட்டி பாருங்கள் உங்கள் உள்ளங்களிலும் இந்த உண்மை சுடுகிறதோ......



எழுதியவர் : pavi (24-Jun-11, 2:15 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
பார்வை : 506

மேலே