தமிழின் அருள்
தமிழே தருவாய்
தருவாய் அருள்வாய்
அருள்வாய் இலக்கணம்
இலக்கணத்தில் நன்நூலாய்
நன்னூலும் தொல்காப்பியமும்
தொல்காப்பியத்தின் தொன்மையென்ப
தொன்மைக்கெல்லாம் துவக்கம் தந்து
துவக்கத்திலே கவிதை கொண்டு
கவிதை கொண்ட தமிழின் பெருமை
பெருமை கொண்ட உலகமெங்கும்
எங்கும் அமுதாய் இதுதான் முதலாய்
முதலின் உயிராய்
உயரின் மெய்யாய்
மெய்யின் சொல்லின் இனிமை
இனிமை செய்யும் கடமை
கடமை கொண்டு நான் வாழ
வாழவைப்பே தமிழ் மொழியே
தமிழ் மொழியே தமிழனாக
தமிழனுக்கு தமிழச்சியாக
தமிழச்சியே தாய்மொழியாக
தாய் மொழியே தலைவணங்குகிறேன்