காதலே களவு
வெட்ட வெளியில்
பொட்டல் காடாய்
இந்த உலகமே
உன்ன நான் பாக்கறவரைக்கும்.
வெளிச்சத்த பாக்கறச்ச
வெங்காயமா கண்ணெரியும்
விளங்காமத்தான் நானும்
வெறும் வாய மென்னுட்டிருந்தேன்.
அப்பத்தான் உன்ன பாத்தேன்
உனக்குள்ள என்ன பாத்தேன்
புதுசு புதுசா கலர் கலரா
தினுசு தினுசா தெனவு தூண்ட
வெளியில சொல்ல வெட்கமாச்சு
விவரம் புரியறதுக்கு கூச்சமாச்சு
காதல் எனக்குள்ளே கர்வமாச்சு
கைவிட்டு போகக்கூடாத ரகசியமாச்சு
உனக்குள்ளே என்ன தேடுறேன் புதையலா
எனக்குள்ளே உன்ன சேமிக்கிறேன் பொக்கிஷமா
உன்னையே ஒவ்வொரு நொடியும் நினைக்கிறேன்
உன்னைப்பத்தி தான் எனக்குள்ள எப்பவுமே பேசிக்கிறேன்
கண் காது மூக்கெல்லாம் எப்படியோ வந்து ஒட்டிக்கிட்டியே
யாராச்சு பாத்துட்டா என் கதி தான் என்னாவது,
அதனாலே உன்னை யாருக்கும் தெரியாம ஒளிச்சேன்
உசுரோட மடிச்சு வச்சு தூங்குற மாதிரி நடிச்சேன்
என் மூக்குக்குள்ள கம கமன்னு மணக்குற
அந்த வாசத்தில எனக்குள்ளாற ரசிக்கிறேன்
யாராச்சும் என்கிட்ட உன்னைப்பத்தி கேட்டாலும்
உன்னை நாக்கடியில் கற்கண்டாக மறைச்சேன்
அது கரையறப்ப இனிக்குதேன்னு இருந்தாலும்
தீந்து போயிடுச்சுன்னா என் பாடு திண்டாட்டம் தான்...