ஈசியா திருட

முருகேசுவும் அவரது கூட்டாளிகளும் ஒரு பேங்க்கை கொள்ளையடிக்க திட்டம் போட்டார்கள்.

எந்த பேங்க்கில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது ஈசியா திருடலாம் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு முருகேசுவுடையது.

முருகேசு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சுற்றிவந்தார். பல இரவுத் தேடலுக்குப்பின்னர், கடைசியாக ஒரு பேங்க்கை பார்த்தார்.

அங்கே ஒரு வாட்ச்மேன்கூட இல்லை. உடனே நண்பர்களிடம் இந்த செய்தியை சொன்னார்.

உற்சாகமான முருகேசுவும் கூட்டாளிகளும் அன்று இரவே செயலில் இறங்கினர். பூட்டை உடைத்து பாங்கிக்குள் நுழைந்தனர்.

ஆனால் அங்கே பார்த்தால் ஒரு சல்லிக்காசுகூட இல்லை.

ஆனால் நிறைய ரெட் ஒயின் பாட்டில்கள் இருப்பதைப் பார்த்தனர்.

“பணம் இல்லாட்டி என்ன. வேண்டுமட்டும் குடித்துவிட்டு போவோம்” என்று தீர்மானித்து, எல்லா பாட்டில்களையும் காலி செய்துவிட்டு வெளியேறினார்கள்.

மறு நாள் பேப்பரில் கொட்டை எழுத்து செய்தி :
“பிளட் பேங்க்கில் திருடர்கள்…… ரத்தத்தை திருடிச் சென்றார்கள்”

எழுதியவர் : செல்வமணி (28-Jul-16, 11:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 256

மேலே