ஊக்கம் உயர்வு
கபாலி கதாபாத்திரம் ரஜனியின்
நடிப்பு ஆற்றல் சுறுசுறுப்பு
அனைத்தும் போற்றப் படத்தக்கது
வயது ஏற ஏற அனுபவ சாயங்கள்,
சளைக்கவில்லை மனிதனின் ஊக்கம்
முன்னேற்றம் முகத்தில் ஒளிர்கிறது
இந்த வயதில் கதாநாயகனாக
வலம்வரும் நல்ல தோற்றம்
சிறிதளவும் தயங்கிடாத ராஜ நடை
உற்சாகம் உழைப்பு அருமை அருமை
ஊக்கத்தையும் மன உறுதியையும்
போற்றுகிறேன் வாழ்த்துகிறேன்