கன்னித் தமிழே நீயே என் இசைத் தாய்..


வெண்பாக்களால் பாடினால்
நீ எனது
திருவெம்பாவை...!

சந்தங்களால்
சுருதி சேர்த்தால்
நீ எனது
திருவாசகம்...!

பூக்களால் தொடுத்து
பக்தி மாலை தொகுத்தால்
நீ என்
ஆண்டாள் பாசுரம்...!

வயல் வெளிகளில்
வெள்ளந்தியாய்ச் சிரிக்கையில்
நீ என்
தெம்மாங்கு...!

மனசு மலருகிற
பௌர்ணமி இரவுகளில்
நீ என்
இளமைத் தாலாட்டு...!

மீசை முளைத்து
காதல் அரும்பிய
தருணங்களில்
நீ என்
துள்ளலிசை துடிதுடிப்பு...!

ராக ஆராதனைகளில்
நீயே
கர்நாடக சங்கீதம்...

எத்தனையோ வடிவங்களில்
நீ விரவிப் பரவினாலும்
நீ தான்
என்று எனது
இசைத் தாய்...!

எழுதியவர் : அன்புபாலா (25-Jun-11, 7:23 am)
சேர்த்தது : anbubala
பார்வை : 340

மேலே