முன்னுக்குப் பின்

நீதிக்குப் பின் பாசம்
என்றால் உறவு இல்லை
உறவுக்குப் பின் நியாயம்
என்றால் நீதி இல்லை

சொல்லுக்குப் பின் வில்
என்றால் உண்மை இல்லை
உண்மைக்குப் பின் செல்
என்றால் வழக்கு இல்லை

ஆசைக்குப் பின் அடிமை
என்றால் அன்பு இல்லை
அன்புக்குப் பின் அடிமை
என்றால் அழிவே இல்லை

சிரிப்பிக்குப் பின் அழுகை
என்றால் நிரந்தரம் இல்லை
அழுகைக்குப் பின் சிரிப்பு
என்றால் ஆணவம் இல்லை

கொள்கைக்குப் பின் கோல்
என்றால் எதிர்ப்பு இல்லை
கோலுக்குப் பின் கொள்கை
என்றால் கோத்திரம் இல்லை

பணத்திற்குப் பின் குணம்
என்றால் சொந்தம் இல்லை
சொந்தத்திற்குப் பின் பணம்
என்றால் எதுவும் இல்லை

வெற்றிக்குப் பின் தோல்வி
என்றால் முயற்சி இல்லை
முயற்சிக்குப் பின் வெற்றி
என்றால் தோல்வி இல்லை

எழுதியவர் : பாத்திமாமலர் (31-Jul-16, 8:39 am)
பார்வை : 133

மேலே