குயில் நீயே

சின்னச் சின்ன குயில் நீயே
சிறகடிக்கும் மயில் நீயே
கண்ணாலதான் தோகையாடுர

திருக்கொண்டை பூ போல
சிலிர்த்துதான் பூத்திருக்க
சலிப்பு இல்லாம
மெல்லமா கொல்லுர

பாதையில நானும் உன்ன
பார்க்கதான் நிக்கையில
பாதகத்தி (தீ) பார்க்காம
போறியே

பனை நுங்கு வண்டிபோல
குடையடித்து கிடக்கிறேனே
கொழு கொழு பெண்ணே
எனை நழுவி ஓடுர
நானும் தேடுரன்
புதிய பாடலைப் போல்
மனதில் பதிந்து
படுகளம் அடித்துச்
செல்கிறியோ

எழுதியவர் : தேகதாஸ் (31-Jul-16, 4:07 pm)
பார்வை : 117

மேலே