என் பெயர் எழுதப்படாத

நா சுவைக்காமல்
விரலோடு ஒட்டிக்கொண்ட
சோற்று பருக்கைகளும்
பிரிய மனமில்லாமல்
தட்டோடு ஒட்டிக்கொண்ட
சோற்று பருக்கைகளும்
வாய்க்கும் விரலுக்குமான
இடைவெளியில் சிதறி விழுந்த
சோற்று பருக்கைகளும்
என் பெயர் எழுதப்படாத
சோற்று பருக்கைகளே...

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (31-Jul-16, 4:01 pm)
பார்வை : 71

மேலே