உள்ளம் உறைந்திடுமோ

காற்றுத்தொடாத இலை,
கவலையோடு உறைந்திருக்க,

அலை தழுவாத கடல்,
அசைவின்றி அமர்ந்திருக்க,

என் உடலும் உறைந்திருக்கிறது - ஆனால்
எண்ணம் நிலவும் மனமோ ,,,,,,,

புயல் மழையின் இரைச்சல் போலும்,
போர் நடக்கும் இடத்தை போலும்,

ஈர்பிளந்த புவிப்பொழும்,
இரைக்கண்ட பறவைகள் போலும்,

கலவரம் கொண்டுள்ளது !

காரணம் அறியவில்லை,
கண்களும் உறங்கவில்லை,
காண்பவர் கற்சிலை என்பர்,
கன்னி மனமோ நெருப்பினில் கொதிக்க !

உடல் உறைந்திருக்கும்,
உயிர் நினைவுகளில் நீர் இருக்க,
உள்ளம் உறைந்திடுமோ ?

எழுதியவர் : ச.அருள் (31-Jul-16, 7:55 pm)
பார்வை : 357

மேலே