இது ஒரு காதல் மொழி
பேச முடியாது
கேட்க முடியாது ஆனால்
செய்கையிலேயே வருகுதே
ஒரு காதல் மொழி
அந்த இருவர்
முகத்திலே சிரிப்பாய் பேசுதே
தேவன் தந்த அந்த விந்தை மொழி
நானும் நேரில் பார்த்த
செய்கை மொழி
அதில் அத்தனையும்
அர்த்தங்களே !