தாய்ப்பால்

இப்பதிவு அவசியம் என நினைத்து பதிகிறேன்.
தாயின் சிறப்பு சென்டிமெண்ட் என்பதெல்லாம் ஏகத்துக்கும் கொட்டியிருக்கிறது  வெளியெங்கும்.  அவை அனைத்தையும் விட்டு அவசியம் அறிந்து நடைமுறை படுத்த வேண்டிய அடிப்படை பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுப்பது. தாய்ப்பாலின் சிறப்பு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  நிற்க

உங்கள் குழந்தைகளுக்கு  அன்பையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பது இன்றியமையாதது இதுதான் சொத்து  மற்றவை அடுத்த நிலைதான்.   தாய்ப்பால் இல்லை,  ஊறல, கிடைக்கல, எங்க அத்தைக்கும் இல்லையாம் இப்படி அது மாதிரி எனக்கும்... இந்த வகை பேச்சுகள் அனைத்தும் சுத்த முட்டாள்தனமானது . பிள்ளை வயிற்றில் வளரும் போதே பாலையும் உற்பத்தி செய்யும் வேலையை  அதுக்கு தேவைனு இயற்கை தொடங்கி பூர்த்தி செய்துடுது.
முதலில் கொடுக்கும் போது அப்படித்தான் இருக்கும் நினைத்த  உடனே  எல்லாம் குபுகுபுவென கொப்பளித்துடாது.  இரண்டு நாட்களில் ஊற்றெடுக்கும் வளமாக.  ஆனால் இதை விட்டு குழந்தை  குடிக்கல பால்  ஊறல  இல்லைங்கிறதலாம்  $#@@ பேற்றல்.   சில பேர்கிட்டலாம் சொல்லி புரிய வைக்கவே முடியாது எந்த மொழியில் என்ன முறையில் சொன்னா புரியுமோ அப்படி சொல்லி பதிய வைங்க நெருக்கமானவர்கள். 

விட்டேத்தியா கொடுப்பது , வெளியே போக முடியல எப்ப பாத்தாலும் கங்காரு குட்டியாட்டம் தூக்கிட்டே இருக்க வேண்டியதா இருக்கு ஃபிரியாவே இருக்க முடியல  என்றெல்லாம் எண்ணாமல்  அக்கறையோட  குழந்தைய  அரவணைத்துக் கொடுங்க கண்டிப்பாக அனைவருக்கும்  பால் இருக்கும்.  இயற்கைக்கு ஓரவஞ்சனை தெரியாது . பெண்கள் செய்வார்கள் முடியும் என்றுதானே இயற்கை  இந்த இமாலயப் பொறுப்பினை நம்மிடம் கொடுத்துள்ளது.

நட்பு வட்டத்தில் திருமணம் ஆகாத இளையவர்களும் இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள். ஆணாக  இருப்பின் தயக்கம் வெட்கம் கூச்சம் எல்லாம் தூக்கி போட்டு விட்டு  திருமணத்திற்கு முன்னரே கூறி விடுங்கள் குழந்தைக்கு ஒரு வருடம் தாய்ப்பால் கொடுத்தே ஆக வேண்டும் என்பதை . பெண்ணாக இருந்தால்
குழந்தை பிறந்தது முதல்  ஒரு வருடம் தாய்ப்பால் கொடுப்பேன் அதற்கான சூழல் அமைய  அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று.   பொருளாதர நிலை ஒத்துழைத்தால் வேலையை விடுதல் ,விடுமுறை, வேலைக்கு சென்று கொண்டே பராமரிப்பு என அவரவர் சூழ்நிலை பொறுத்து முடிவெடுங்கள். 

நீங்க அடுத்த தலைமுறையை உருவாக்கி கொடுக்கறிங்க.  உங்கள் குழந்தைகள்  ஆரோக்கியமா இருக்கும் போது அவர்கள்  தங்களோட குழந்தைகளையும் நலமாதான் கொடுப்பாங்க.  எவ்வளவு பொறுப்பு இருக்கனும் பாருங்க.

(இது குறித்து தகவல் வேண்டும் சந்தேகம் கேட்க வேண்டும் எனில் இன்பாக்ஸ் வரலாம் தெளிவுபடுத்த தயாராக இருக்கிறேன்.  (பெண்கள் மட்டும் ) )

இப்படிலாம் முடியாதுனா குழந்தையே பெத்துக்காதிங்க.

எழுதியவர் : அகராதி (1-Aug-16, 12:40 pm)
சேர்த்தது : aharathi
Tanglish : thaaippaal
பார்வை : 255

சிறந்த கட்டுரைகள்

மேலே