தினம் ஒரு தத்துவ பாட்டு - 29 =180

கோபம் பொல்லாத கோபம்
ஏ மனிதா ! ஏனிந்த தாபம் ?
கோபம் ஒரு சாபம் அல்ல;
கோபிப்பதால் லாபம் இல்ல !

தலைக்குமேல் கோபமென்பது
தன்னைத்தானே சீரழிப்பது
எல்லைமீறி கோபிப்பது
தோல்வியை துணைக்கழைப்பது

கோபப்படுவதில் அர்த்தம் வேண்டும்
குடி கெடுக்கும் கோபம் வேண்டாம்
தேவைப்பட்டால் கோபம் வேண்டும்
கோபமே வேலையாய் வேண்டாம்

சூரியன் அதிகம் கோபப்பட்டால்
பூமியில் வறட்சி தொடர்கதையாகும்
வருணன் அதிகம் கோபப்பட்டால்
நிலபரப்பெங்கும் நீரில் மிதக்கும்

ஒருதாய் மக்கள் நாமெல்லாம்
நம்மில் பல பிரிவினைகள்
பிரிவினைவாத கயவர்களால்
தீர மறுக்குது கலவரங்கள்

பேதமில்லா தேசம் எதுவோ
சுட்டிக்காட்ட ஒன்று உண்டா ?
கோபமில்லா மனிதன் எவனோ
சொல்லிக்கொள்ள ஒருவர் உண்டா ?

இயற்கை அன்னை எல்லாம் தந்தாள்
இருந்தும் மனிதன் அலைகின்றான்
போதும் என்று சொல்வதற்கு
எந்த மனிதன் முயல்கின்றான்

தேவைகள் அதிகம் இருக்கும்போது
பாவங்கள் செய்ய நேர்கிறது
ஆசைகள் அறவே துறக்கும்போது
கோபங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.

எழுதியவர் : சாய்மாறன் (2-Aug-16, 9:36 pm)
பார்வை : 191

மேலே