தமிழ் பெண்

தமிழ் பெண்:
கூரைப் பட்டு உடுத்தி
கூந்தல் தோகை விரித்து
அகழ் விளக்கெடுத்து
அடி மேல் அடி வைத்து
அவள் நடக்கையிலே
என் அங்கமும் அசையுதடி
அவளுடைய ஓரப் பார்வை
ஓர்வார்த்தை சொல்ல நினைக்கையிலே
என் உள்ளமும் உருகுதடி
இதழ்மடியில் சுருள முடி தீண்டுகையிலே
என் திமிரும் அடங்குதடி
அதிகாலையில் அவளைப் பார்க்க போகையிலே
என் ஆன்மா துடித்ததடி
அருகினிலே அவள் செல்லும்போது
அவளின் தாவணி என்மீது தவழும் போதும்
தனித்து இருந்தேன் தனிமையிலே
தவம் புரிந்தேன் மறுபடியும் தீண்ட
தினமும் பார்த்தேன் அவள் தீயை வார்த்தாள்
சுட்டதோ கொஞ்சம் வழித்ததோ
என் நெஞ்சம்
சிலை செதுக்கினேன் கொஞ்சம்
வார்த்தையாக மொழிப் புரிந்தது
என் நெஞ்சம் காதல் என்று……