காகிதங்கள்

முத்தான எழுத்துக்களை தாங்கி தானே
--------------முந்நூற்று ஆறுபத்திஐந்து நாட் களுமே
சத்தான கதைகளுடே சேதிகள் பலவும்,
--------------சாதிமத சண்டையோடு சரித்திர நிகழ்வும்
நித்தமும் படிக்கத்தான் தந்தே உதவி
--------------நல்லதோர் தோழுனும் ஆகி நின்றே
எத்திக்கும் செய்திகளை இனிய படமோடு
--------------ஏந்திவரும் செய்திதாளும் காகிதம் தானே!
இதெல்லாம் காகிதமே என்றே எண்ணாது
--------------இணக்கமுடன் ஏக்கத்தோடு எண்ணி பார்த்து
புதுப்பெண்ணை வருடுவதாய் அன்பாய் நீவி
--------------பத்திரமாய் பணமடுக்கும் பொக்கிஷ அறையில்
விதம்விதமாய் அடுக்கித்தான் அழகு பார்த்தும்
-------------விரட்டுகின்ற நாய்களிடம் கிடைத்த தெங்கென
அதனையே காவலாய் என்றென்றும் காத்து
- -------------அளிக்காத கஞ்சரிடம் பணம்கூட காகிதமே !
புத்தக பையதனில் புதிதான நோட்டிலே
--------------பக்குவமாய் கிழித்தெடுத்து அதனில் ஒரு
கத்திகப்பல் ஒன்றை செய்து தானே
- -------------கனமழையின் நீரினிலே ஓடத்தான் விட்டு
சத்தமாய் கரவொலியும் தாம் செய்து
--------------சந்தோஷ துள்ளல் போட்டே நோட்டினில்
மொத்தமாய் கிழித்தேதான் செய்து வைத்த
--------------”கத்தி கப்பல்களும்” அழகு காகிதங்களே !
---கே.அசோகன்.