எங்கே போவேன் உன்னை விட்டு

வெட்டும் கருவி
ஒட்டவைத்தது
இதயத்தை
அவனிடம் தந்து

கண்ணில்
வலி என்றால்
அழ யாருண்டு ?
கண்ணே அழுமோ!
என் கண்ணே அழுமே.....


உயிரும் என்னிடம் இல்லை
உடலும் என்னிடம்
இல்லை
உள்ளமும் என்னிடம்
இல்லை
உதிரவில்லை நான்
உன்னிடம் வாழ்கிறேன்
உன்னோடு சேர்ந்தது யாவும்
உன்னுடையது யாவும்

தூக்கனாங் குருவி கூட்டில் வாழ வேண்டும்
உன் கதகதப்பில்
உன்னை அணைத்துக்கொண்டே
அணைந்திட வேண்டும்


மயிலிறகு சாமரம் உனக்கு வீச
என் தேகத்தை மயிலுக்கு வெட்டி தந்தேன்
பஞ்சு மெத்தையில்
நீ தூங்க
நான் தாலாட்டு
பாடுவேன்
நோய்க்கு மருந்தாய்
நானாவேன்
மருந்துக்கு விருந்தாய்
நானே ஆவேன்

நேற்று மனிஷி
இன்று பிணம்
நாளை ???

யார் எப்படியோ
நினைக்கட்டும்
உன் மனதில்
நான் எப்படி?
நேற்று
இன்று நாளை

நான் சொல்லட்டுமா
என்றும் நீ தான்
எனக்கு யாவும்

நேற்று
உயிரை தந்தேன்
இன்று
உடலை தந்துவிட்டேன்
எங்குபோவேன்
நீ தானே
என் நாளை

உன் காலில் மிதிபடும்
மண்ணாவேன்
நீ சுவாசிக்கும் காற்றாவேன்
நீ முகரும் மலராவேன்
நீ வருடும் குழலாவேன்
நீ இசைக்கும் புல்லாங்குழலாவேன்
உன் பாதம் படும் புல்லாவேன்
பனி துளியாவேன்
நீ உண்ணும் உணவாவேன்
உனக்குள்ளே நானிருப்பேன்
உன்னிடமே
தந்துவிட்டேன்
என்னை
எங்கேயும் இல்லை நான்
ஒரு உயிருக்கு
இரு உடல்
எதற்கு என்று
இறைவனும்
எடுத்துவிட்டான்
என் உடலை
உயிரை உன்னிடமே
உனக்குள்ளே
தந்துவிட


உன்னை பார்த்து ரசித்து கொண்டே இருப்பேன்
எப்பொழுதும் போல்
இப்பொழுதும்
உனக்கு தொந்தரவு தராமல்
உனக்கு தொல்லை என்பதே அருகில் வராமல்
பார்த்துக் கொள்வேன்
உன்னை பார்த்துக்கொள்வேன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Aug-16, 6:41 am)
பார்வை : 4467

மேலே