காதல் சுகம்

புது சுகம் தோன்றி மலருதே
பழசெல்லாம் பேச துடிக்கிதே
வெறும் சொல்லும் கவிதை ஆகுதே
அன்பே ...

சில காலம் மறந்து போகட்டும்
சில வேஷம் கலைந்து போகட்டும்
உயிர் காதல் நிலைத்து வாழட்டும்
அன்பே ...

கடல் நீரும் காணல் ஆகுமோ
வெறும் கண்ணீர் காயம் போக்குமோ
உதிர்ந்தது திரும்ப மலருமோ அன்பே ...

நினைவெல்லாம் நதிகள் ஆகுதே
நினைக்கையில் வழிந்து ஓடுதே
நிழலது நனைந்து நடுங்குதே அன்பே ...

எழுதியவர் : தீ .ஜெ.அகாஷ்வருண் (3-Aug-16, 11:33 pm)
சேர்த்தது : தீ ஜெ அகாஷ் வருண்
Tanglish : kaadhal sugam
பார்வை : 104

மேலே