கல்லூரிக்கு செல்வோம்

கல்லூரி படிப்பினை முடித்து ஆண்டுகள் சில ஆயின...

எவ்வளவோ மாற்றங்கள் என்னுள்ளும் என் கல்லூரியிலும்...
இதை தான் சொன்னார்களோ மாற்றம் ஒன்றே மாறாதது என்று...

முதல் மாற்றம்..
உரிமையோடு எந்த நேரமும் என் கல்லூரிக்கு போன நான் இன்றோ அனுமதி கேட்டு அனுமதி சீட்டு வாங்கி நிற்கிறேன் முன்னாள் மாணவனாய்...
இருபது அடியிலிருந்து இருநூறு அடியாய் வளர்ந்து நிற்கிறது என் கல்லூரியின் கட்டடங்கள்...

கல்லூரியின் உள்ளே ஒவ்வொரு அடி முன்னோக்கி எடுத்து வைக்கும் போது என் நினைவுகள் பின்னோக்கி சென்றது...

எப்போதும் பத்து பேராக அமர்ந்து வம்பிழுக்கும் அந்த திண்ணை.. அந்த பத்து பேர் இல்லாமையால் தனிமையில் வாடுகிறது...

என்னையும் கண்டால் பயப்படும் அந்த ஜூனியர் மாணவர்கள் இன்றோ இங்கில்லை..

நாங்கள் அடித்த கும்மாளங்களுக்கு செவிடாய் போன என் கல்லூரி விடுதி சுவர்களுக்கு இன்று காதுகளிருந்தும் வாய் இல்லாமல் மௌனமாய் நிற்கிறது...

சுவர்களில் நாங்கள் கிறுக்கிய கிறுக்கல்களை காணோம்...

வேண்டுமென்றே வம்பிழுக்கும் போதும் புன்னகையால் சமாளிக்கும் சக தோழியை காணோம்...

அண்ணா என்று அழைத்த ஜூனியர் பெண்களை காணோம்... அப்படி மட்டும் சொல்லாதம்மா என கெஞ்சிய என் வார்த்தைகளை காணோம்..

கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் என்னை விட்டுக்கொடுக்காத என் நண்பர்களை இங்கு காணோம்..
தேர்வறைகளில் இருந்த மௌனங்களை காணோம்...

தேர்வு முடிந்த பிறகு எங்களுள் வரும் சலசலப்பைக் காணோம்..
உரிமையோடு என் காதை பிடித்து திருகும் என் HOD யை காணோம்.. பெயர் மட்டும் இருந்தது முன்னாள் HOD களின் பட்டியலில்...

நண்பர்களுடன் அடித்த அரட்டைகளும்..
ஒரு பெண்ணின் மீதான ஈர்ப்பு வந்த தருணமும்...
அது காதலாய் மாறிய நிமிடங்களும்...
அதை சொல்ல முடியாமல் புலம்பிய புலம்பல்களும்..
சொல்லி விட்ட பிறகு அடைந்த ஏமாற்றமும்..
கடைசி நாள் கண்ணீரும்...

எதையும் காணோம்..
ஆம் எதையும் காணோம்..

எதையும் காணோம் என்ற நினைப்பில் என் கல்லூரி மரத்தடியில் அமர்ந்தேன்...

ஆனால் ஒன்று மட்டும் கிடைத்தது... இத நாள் வரை நான் இழந்த நிம்மதி...

-ரஞ்சித் பழனிச்சாமி

எழுதியவர் : Ranjith Palanisamy (5-Aug-16, 9:24 pm)
சேர்த்தது : RanjithPalanisamy
Tanglish : kallurikku selvom
பார்வை : 468

மேலே