நண்பனுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

நேற்று
முதல் நீ விண்ணில்
ரசித்த கொண்டிருந்த வெண்ணிலா
இன்று உன் அருகில்
மணமகளாய் ஜொலிக்க !
அந்நிலவுடையாளை காதல்
போரில் கைப்பற்றி
கல்லியான வாழ்வில்
கரம் பிடித்து உண்மை
காதலை ஊர் அறிய
செய்த உண்மை காதலனே
வாழ்க பல்லாண்டு !
கையோடு கை சேர்ந்து
இரு மனங்கள் ஒன்றாய்
இணையும் இத்திருமணத்தை
வானத்தில் வாழும் வானவர்களும்
இம்மண்ணில் வாழும் மாசற்ற
மாந்தர்களும் வாழ்த்துவர் மனதார !
கடல் அலை போல்
நிற்காத மகிழிச்சியும்
காலை பனி போல்
காணாமல் போகும் துன்பமும்
உங்கள் ஒற்றுமையை மேலும்
ஒன்றிணைக்கும் சிறுசிறு வூடல்களும்
உங்கள் வாழ்வில் என்றும்
நிலைக்க வாழ்த்துக்கள்
நண்பா !.........