உனக்குள் காதல்

நண்பா...
உனக்குள் காதல்
உதயமாகிவிட்டது...
நான் உணர்கிறேன்...
நீ உணர்வை மறைக்கிறாய்.....
உனக்காக
சில ஆதாரங்கள்
புகார்களாக..
உனது அறை கண்ணாடி...
உன் முகத்தை....
அதிக நேரம் காண்கிறதாம்...
உனது குளியலறையின் குழாய்...
உனது பாடலுக்கு
அதிக நேரம்...
இசை அமைக்கிறதாம்...
தமிழ் பயிற்சி புத்தகம்....
உனது புதிய கையெழுத்தால்...
மயங்கி நிற்கிறதாம்.....
சுவர் கடிகாரம்....
அடிக்கடி நீ
ஓரக்கண்ணால் பார்ப்பதால்..
வெட்கப்பட்டு நிற்கிறதாம்...
உனது பேனா
உனது கவிதையால்
சொக்கி நிற்கிறதாம்....
உனக்குள் காதல்...
உண்மையா......?