சின்னஞ்சிறு பட்சிகள்

பால் குடிக்க கொஞ்சி அழுகிறது ஒன்று
பாலில்லையே குடிக்க என கெஞ்சி அழுகிறது ஒன்று



சோறு உண்ண நிலவை அழைக்கிறது ஒன்று

நிலவை அழைத்து சோறு கேட்கிறது ஒன்று



புதியது வாங்க பழையதை பிய்க்கிறது ஒன்று

பழையதை புதிதாக எண்ணி மகிழ்கிறது ஒன்று



பள்ளிக்கு போகமாட்டேன் என வாசலில் அடம் செய்கிறது ஒன்று

பிழைக்க வழியில்லையே என வாசலில் கை ஏந்துகிறது ஒன்று



அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என

முழங்குகிறது பல கட்சிகள்



அவர்கள் வீட்டிலேயே வேலை செய்கிறது

சின்னஞ்சிறு பட்சிகள்

எழுதியவர் : (8-Aug-16, 7:54 pm)
பார்வை : 47

மேலே