மனநிலை கண்ணுக்குத்தெரியாத தராசு
பழைய மளிகைக்கடைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்...
டிஜிட்டல் தராசுகள் வாராக் காலாமது. எடைக்கல் வைத்துத்தான் நிறுத்துக் கொடுப்பார்கள். அருகருகே இருந்த இரு கடைகளில் ஒரு கடையில் மட்டும் அதிக கூட்டம் இருக்கும். இன்னொரு கடையில் அவ்வளவாக இருக்காது.
காரணம் அந்த முதல் கடைக்காரர் தராசில் பொருளை வைக்கும் போது எடை அளவைவிட குறைந்த அளவே வைப்பார். பிறகு மூட்டையிலிருந்து பொருளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பார்...வாடிக்கையாளருக்கு தனக்கு அதிகமாக பொருளை அவர் தருவது போன்ற நிறைவைத் தரும் இந்தச் செய்கை. பின்னவர் என்ன செய்வார் தெரியுமா? முதலிலேயே அதிகளவு பொருளை நிறுத்திவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தராசிலிருந்து எடுத்து தன் மூட்டையில் போடுவார்...வாடிக்கையாளரின் மனநிலை தனக்கு சேரவேண்டிய பொருளை கடைக்காரர் திரும்ப எடுப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும்.
இதுதான் முன்னவரின் வெற்றி இரகசியம். வாழ்விலும் இது போன்று நிறைய நுட்பமான நடைமுறைகளைக் கொண்டிருப்போமே?