என் வானம் நீ
என் இரவுக்கு நிலவல்ல நீ
ஏனெனில் மறைந்து விடுவாய்
என் சோலையில் மலரல்ல நீ
ஏனெனில் வாடி விடுவாய்
என் உடலில் உயிரல்ல நீ
ஏனெனில் பிரிந்து விடுவாய்
என் உலகுக்கு வானம் நீ
ஏனெனில் எங்கும் எப்போதும்
என்னை நீங்காமல் இருக்கும்
என் வானம் நீ